Rahul Gandhi Yatra:திணறப் போகுது டெல்லி!40,000 பேர்!ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளை டெல்லி பிரவேசம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை நாளை(24ம்தேதி) டெல்லிக்குள் நுழைகிறது. ஏறக்குறைய 40 ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில்நடக்க இருப்பதால் போக்குவரத்து நெரிசலில் டெல்லி திணறப் போகிறது.

On Saturday, Rahul Gandhi's Bharat Jodo Yatra will arrive in Delhi.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை நாளை(24ம்தேதி) டெல்லிக்குள் நுழைகிறது. ஏறக்குறைய 40 ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில்நடக்க இருப்பதால் போக்குவரத்து நெரிசலில் டெல்லி திணறப் போகிறது.

இது தவிர காங்கிரஸ் கட்சியின் ஒத்த சிந்தனையுடன் உள்ள அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சித் தலைவர்களும் நடைபயணத்தில் பங்கேற்கலாம் என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். ஆதலால், நாளை டெல்லி நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், எம்.பி.க்கள், பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்தது:இரு அவைகளும் முன்கூட்டியே முடிந்தது

கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா,மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானாவைக் கடந்து, நாளை டெல்லியை அடைய இருக்கிறது

On Saturday, Rahul Gandhi's Bharat Jodo Yatra will arrive in Delhi.

குருகிராமில் உள்ள சோனாவில் உள்ள கேர்லி லாலா பகுதியில் இருந்து இன்று காலை ராகுல் காந்தியின் யாத்திரை தொடர்ந்தது. ராகுல் காந்தியுடன் திமுக எம்.பி.கனிமொழியும் இன்று நடைபயணத்தில்  பங்கேற்றார்.

ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், சக்திசின் கோகில் ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

Bharat Biotechக்கின் ஊசியில்லா, மூக்குவழி கொரோனா தடுப்பூசி இன்று அறிமுகம்: யார் பயன்படுத்தலாம்?

இன்று இரவு ராகுல் காந்தி நடைபயணம் பரிதாபாத்தில் நிறுத்தப்படும். நாளை காலை பாதர்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழையும். 

அங்கிருந்து அப்பலோ மருத்துவமனை வழியாகச் சென்று ஆஷ்ரமத்தை ராகுல் காந்தி யாத்திரை அடையும். அங்கு மதிய உணவுக்காக ஓய்வு எடுப்பார்கள். அங்கிருந்து மாலை புறப்பட்டு நிஜாமுதீந் வழியாக இந்தியா கேட், ஐடிஓ, டெல்லி கன்டோன்மென்ட், தர்யா கன்ஞ், செங்கோட்டை செல்லும்.

செங்கோட்டையில் இருந்து ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ராஜ்காட் மற்றும் சாந்தி ஸ்தலத்துக்கு கார்மூலம் சென்று அஞ்சலி செலுத்துவார்கள். 

On Saturday, Rahul Gandhi's Bharat Jodo Yatra will arrive in Delhi.

சனிக்கிழமை இரவு சிறிய ஓய்வுக்குப்பின், ஜனவரி 3ம் தேதி முதல் உத்தரப்பிரதேசத்தில் இருந்து ராகுல் காந்தியின் யாத்திரை புறப்படும். 2வது கட்டமாக ஹரியானா, பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீர் செல்லும்.
டெல்லியில் யாத்திரை நடத்துவதற்காக எந்த சிறப்பு அனுமதியும் பெறவில்லை.

நடைபயணமாகச் செல்வதற்கு அனுமதி தேவையில்லை. ஏற்கெனவே நாங்கள் செல்லும் பாதை குறித்து போலீஸாருக்கும்,  மத்திய ரிசர்வ் போலீஸாருக்கும் வழித்தட மேப் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல் அவர்கள் பாதுகாப்புவழங்குவார்கள்” எனத் தெரிவித்தார்

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கான கொரோனா தடுப்பு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லிக்குள் ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையில் 40ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் வரை பங்கேற்பார்கள் என டெல்லி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அனில் பரத்வாஜ் தெரிவித்தார்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios