காதல் ஜோடி ஒன்று டெல்லி நெடுஞ்சாலையில், அனைவர் மத்தியிலும் ஆபத்தை உணராமல், முத்தமிட்டுக்கொண்டு வாகனத்தில் சென்ற காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

பொதுவாக காதலர்கள் வாகனங்களில் செல்லும்போது, காதலில் பின் இருக்கையில் அமர்ந்து, காதலனை இறுக்கி அணைத்தபடி செல்வது வழக்கம்.  

ஆனால் ஒரு ஜோடி சற்று வித்தியாசமாக, ஆபத்தை உணராமல் நடந்து கொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இது மற்றவர்களை பாதிக்கும் என்பது கூட அவர்களுக்கு தோன்றவில்லையா? என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேற்கு டெல்லியில் உள்ள ராஜோரி - கிர்டி நகர் நெடுஞ்சாலையில், தன்னுடைய காதலருடன் சென்ற பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தின்  முன்பக்கத்தில் (பெட்ரோல் டாங்க் மேல்) அமர்ந்து,  காதல் போதையில் அவருக்கு முத்தமிட்டுக்கொண்டே சென்றார்.

காதலனும் ஆபத்தை உணராமல், தன்னுடைய காதலியுடன் முத்தமிட்டுக்கொண்டே...  வண்டியை வேகமாக ஓட்டி சென்றார். இது பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.  இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஐபிஎஸ் அதிகாரி தலிவால், இந்த காட்சியை வீடியோவாக எடுத்து, அதனை அவரது  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் சாலை விதிகளுக்கான சட்டத்தை மேம்படுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார். இந்த காட்சியை பார்த்த பலர், ஆபத்தை உணராத இந்த பயணத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.