தலைகவசம் அணியாமால் வந்த சொந்த மகனுக்கு அபராதம் விதித்தார் வாகன் தணிக்கையில் இருந்த  ஆய்வாளர்

உத்திரப்பிரதேச மாநிலத்தில்,ராம் முஹர் சிங் என்ற ஆய்வாளர் வாக தணிக்கையில் ஈடுபட்டு இருந்துள்ளார்

அப்போது அதே பகுதியில்,அந்த வழியாக ஹெல்மட் அணியாமல் வந்த தனது மகனை பார்த்து வண்டியை  நிறுத்தி உள்ளார்

பின்னர் அவருக்கு சட்ட விதிப்படி,ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ரூ.100  அபராதம் விதித்தார் அந்த  ஆய்வாளர்

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,”சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் யாராக இருந்தாலும் அபராதம்  விதிக்க சொல்லி இருக்கிறார்கள்....விபத்துகளை தடுக்க மக்களிடேயே சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட உயர் அதிகாரிகள் பெரும்  முயற்சி செய்து வருகின்றனர்..

சட்டம் என்ன சொல்கிறதோ அதனை தான் நான் செய்தேன்....என் மகன் என்பதற்காக நான் எந்த வித தயக்கமும் காட்ட வில்லை...என தெரிவித்து இருக்கிறார்.

இது தவிர்த்து அதே பகுதியில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக சுமார் 58 பேருக்கு 10 ஆயிரம் ரூபாய் அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்   தனது மகன் என்றும் பாராமல் அபராதம் விதித்த இந்த ஆய்வாளரை மற்ற உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்