நடுவானத்தில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் எமெர்ஜென்சி கதவை திறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 'இதற்காகத்தான்' எமெர்ஜென்சி கதவை திறந்தேன் என்று இளைஞர் கூறியதைக் கேட்ட அதிகாரிகள் அதிர்ந்து போயினர். 

டெல்லியில் இருந்து பாட்னா நோக்கி கடந்த 22 ஆம் தேதி விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் எமெர்ஜென்சி கதவை திறக்க முயன்றார். இதனைப் பார்த்த பயணிகள் அதிர்ந்து போனார்கள். பின்னர், விமான பணிப்பெண்கள் வரவழைக்கப்பட்டனர்.

அங்கு வந்த பணிப்பெண்கள், நபரை தடுத்து நிறுத்தினர். நல்லவேளையாக கேபின் கதவு பிரஷர் காரணாக கதவு திறக்கப்படவில்லை. அந்த நபரை பேச விடாமல், அவரது இருக்கையில் அமர வைத்து விட்டு பணிப்பெண்கள் சென்றனர். 

பின்னர் விமானம் தரையிறங்கியதும் அந்த இளைஞரை, பாதுகாப்பு அதிகாரிகளிடம் விமான ஊரியர்கள் ஒப்படைத்தனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரித்தபோது, ராஜஸ்தான் - அஜ்மரில் ஒரு பிரபல தனியார் வங்கியில் வேலை செய்வதாகவும், முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்வதாகவும் கூறினார். 

எதற்காக விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சித்தீர்கள் என்று கேட்டனர். இளைஞர் அளித்த பதிலைக் கேட்ட அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்தனர்.

 அந்த இளைஞர் கூறியது இதுதான். விமானத்தில் முதன் முறையாக பயணம் செய்வதாக கூறிய அவர், கழிவறை கதவு என்று நினைத்துக் கொண்டு விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்றதாக கூறினார். 

அவரது அப்பாவித்தனமான பேச்சைக் கேட்ட பாதுகாப்பு அதிகாரிகள், அவருக்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தனர். மேலும், இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் அவரிடம் கூறினர்.