Asianet News TamilAsianet News Tamil

"கார்ப்பரேட் உணவு எனும் பேராபத்து"! வேலைக்காரன் சொல்லும் பகீர் தகவல்... 

A partly satisfying indictment of corporate culture and consumerism
A partly satisfying indictment of corporate culture and consumerism
Author
First Published Dec 25, 2017, 2:19 PM IST


தீங்கான கார்ப்பரேட் உணவு முறைக்கு எதிராக தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள 'வேலைக்காரன் திரைப்படம்' "கார்ப்பரேட் உணவு எனும் பேராபத்து" என்ற கருத்தினை முன் வைத்துள்ளது.

இருதய நோய்கள், நீரிழிவு, மூச்சுக்குழல் நோய்கள், புற்றுநோய் ஆகிய கொடும் நோய்களுக்கு மிக முதன்மையான காரணம் மிக அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு, ரசாயனங்கள் அடங்கிய கார்ப்பரேட் உணவுகள் ஆகும். தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாகவும், ஷாப்பிங் மால்கள் மூலமாகவும் திணிக்கப்படும் நவநாகரீக உணவுகள் அனைத்தும் இந்த வகையானவைதான். குறிப்பாக குழந்தைகளை குறிவைத்து இவை திணிக்கப்படுகின்றன.

A partly satisfying indictment of corporate culture and consumerism

"வேலைக்காரன்"

கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்கள் எவ்வாறு மக்கள் மீது திணிக்கப்படுகின்றன என்பதை வேலைக்காரன் திரைப்படம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மக்கள் தாமாக விரும்பி பொருட்களை வாங்குவதாக நம்புகின்றனர். அது உண்மை அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் தேவையே இல்லாத பொருட்களையும் ஆபத்தான பொருட்களையும் மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கின்றன. அதனை இப்படம் விளக்கியுள்ளது.

'Super Size Me'

A partly satisfying indictment of corporate culture and consumerism

'மெக்டொனால்ட்' (McDonald's) எனும் அமெரிக்க கார்ப்பரேட் பெருந்தீனி (Junk food) உணவகத்தில் மட்டுமே, தொடர்ச்சியாக 30 நாட்கள் சாப்பிடும் நபரின் உடல் எவ்வாறெல்லாம் கெட்டுப்போகிறது - என்பதை காட்சிப்படுத்தும் புகழ்பெற்ற ஆவணப்படம் இதுவாகும். இந்த 'Super Size Me' படத்தின் கருத்து வேலைக்காரன் படத்தில் பயன்படுத்துள்ளது.

A partly satisfying indictment of corporate culture and consumerism

கார்ப்பரேட் வணிக நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள சீரழிவுக்கு, வேலைக்காரன் திரைப்படம் முன்வைக்கும் தீர்வு சினிமாத்தனமாக இருந்தாலும், அப்படம் எடுத்துக்காட்டும் சிக்கல் உண்மையானது. மிகவும் ஆபத்தானது. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒவ்வொரு நிமிடமும் பல கோடி செலவில் - தேவையில்லாத, ஆபத்தான குப்பைகளை மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் திணிக்கின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios