நீதிபதியையே சிறையில் தள்ளிய பெண் வக்கீல்....! 

தெலுங்கானா மாநிலத்தில் பெண் வக்கீல் ஒருவரை பலாத்காரம் செய்ததாக, கொடுக்கப்பட்ட புகாரில் நீதிபதி கைது செய்யப்பட்டார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூரியபேட்டையில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் சத்திய நாராயணராவ். இவருக்கு வயதோ 28. இவர் தன்னுடன் வழக்கறிஞராக பணிபுரியும் ஒரு பெண்ணுடன் காதல் வலை வீசி, அந்த பெண்ணிடம் தகாத உறவு வைத்து உள்ளார். 

பின்னர் வேறு ஒரு பெண்ணுடன் தற்போது நிச்சயதார்த்தம் செய்து உள்ளதாக தெரிகிறது. அதாவது, தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக பெண் வக்கீலிடம் ஆசை வார்த்தை கூறி அவருடைய உடல் பசிக்கு  பயன்படுத்தி உள்ளார்  நீதிமான்.

இது குறித்து பாதிக்கப்பட்ட 29 வயதான பெண் வக்கீல் புகார் கொடுத்தார். அதில், தன்னை நீதிபதி சத்தியநாராயண ராவ் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி உள்ளார் 

இவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நீதிபதி மீது, பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் நீதிபதி சத்திய நாராயணராவ் மீது வழக்கு பதிவு செய்தது.

பின்னர் இது தொடர்பாக, குற்றவாளியாக நிற்கும் நீதிபதியை, கோர்டில் உள்ள விசாரிக்கும் நீதிபதியின் முன் நிறுத்தி நடந்ததை புட்டு புட்டு வைக்கவே, உண்மை நிரூபிக்கப்பட்டதால், உடனடியாக அவரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.