a husband make her wife to get marriage with her lover
தன் மனைவியை காதலருடனே சேர்ந்து வைத்து வாழ்த்து கூறிய அற்புத கணவருக்கு பாராட்டுக்கள் குவித்த வண்ணம் உள்ளது
கான்பூர் உள்ள கானிக்வன் கிராமத்தில் வசித்து வருபவர் கோலு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சியாம் நகர் பகுதியை சேர்ந்த சாந்திக்கும் திருமணம் நடைப்பெற்றது
கடந்த பிப்ரவரி மாதம் நடைப்பெற்ற திருமணத்தை அடுத்து, திடீரென தன் தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என சாந்தி தன் கணவரிடம் தெரிவிக்க அவர் ஓகே சொல்லி உள்ளார்
பின்னர் மனைவியின் ஆசைப்படியே அவரை ஊருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அதன் பின்னர் அவர் திரும்பி தன் கணவர் வீட்டுக்கு வராததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர், மனைவியை பார்க்க அவர் வீட்டிற்கு சென்று உள்ளார்
பின்னர்,அப்போது "நான் லக்னோவை சேர்ந்த ரவி என்பவரை காதலிக்கிறேன்.. என்னுடைய விருப்பம் இல்லாமல் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்..மனதில் ஒருவரை நினைத்துக் கொண்டு உங்களுடன் வாழ விருப்பம் இல்லை என கூற, உண்மையான ஹீரோவாக மாறி உள்ளார் கணவர்
நேராக லக்னோ சென்று ரவியை சந்தித்து பேசி உள்ளார். பின்னர் இரண்டு வீட்டிலும் பேசி, போலிசாரிடம் நடந்ததை கூறி, பின்னர் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
தாலி கட்டிய மனைவி என்றாலும், அவர் இன்னொருவரை காதலித்து உள்ளார் என்ற விஷயம் தெரிந்த உடன் மிகவும் பெருந்தன்மையாக அவர்கள் இருவரையும் சேர்ந்து வைத்து திருமணமும் நடத்தி அழகு பார்த்த கணவருக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
