Buddhist master: திபெத்திய புத்த மடாதிபதியாக 4 வயது சிறுவன் தேர்வு!இமாச்சலப் பிரதேசத்தில் அலங்கார ஊர்வலம்
இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் லாஹுல் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள ஸ்பிதி பள்ளத்தாக்கில் உள்ள தாபோ மண்டலத்தின் புத்த மடாதிபதியாக 4வயது சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சிறுவன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்
இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் லாஹுல் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள ஸ்பிதி பள்ளத்தாக்கில் உள்ள தாபோ மண்டலத்தின் புத்த மடாதிபதியாக 4வயது சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சிறுவன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்
லாஹூல் ஸ்மிதி மாவட்டத்தைச் சேர்ந்த நவாங் டாஷி ராப்டன் என்ற 4வயது சிறுவனே அடுத்த புத்த மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி ரன்கிரிக் கிராமத்தில் ராப்டன் பிறந்தார்.
குஜராத் தேர்தல்: இதுதான் உங்கள் பாடமா? அமித் ஷாவை விளாசிய அசாசுதீன் ஒவைசி
திபெத், இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள புத்த மடாதியாக இருந்த தாக்லங் செதுல் ரின்போச்சே 2015ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காலமாகினார். அவருக்குப்பின் கடந்த 7 ஆண்டுகளாக புதிய மாடதிபதிஇல்லாமல் இருந்த நிலையில் தற்போது நவாங் டாஷி ராப்டன் என்ற சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திபெத்திய புத்த மதப்பள்ளிகளில் சாக்யா, காக்யு, கெலுக், யிங்மா ஆகியவை முக்கியமானது. இதில் யிங்மா பள்ளியின் மடாதிபதியாக தாக்லங் செதுல் ரின்போச்சேஇருந்தார். அவரின் மறைவுக்குப்பின் மடாதிபதி நியமிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
திபெத்திய புத்த மடாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நவாங் டாஷி ராப்டனுக்கு அங்கு நர்சரி பள்ளிக் கல்வியும் அதைத் தொடர்ந்து ஷிம்லாவில் உள்ள பாதாகாட்டியில் புத்த மதம் சார்ந்த கல்வியும் கற்பிக்கப்படும்.
மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்! பெண்கள் பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்ததால் பணிந்தார்
புதிய மடாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவாங் டாஷி ராப்டன் சிறுவனை வரவேற்க ஷிம்லா நகரில் நேற்று ஏராளமான திபெத்திய புத்த குருமார்களும், துறவிகளும், கூடியிருந்தார்கள். ராப்டனை அவரின் பிறந்த வீட்டிலிருந்து புத்தாடைகள் அணிவித்து, அலங்கார ஊர்தியில் அழைத்துவந்தனர்.
தாபோ நகரில் உள்ள செர்காங் அரசுப் பள்ளியில் நர்சரி வகுப்பில் ராப்டன் படித்து வந்தார். இனிமேல் ராப்டனை, சங்கம் என்ற புத்தப் பள்ளியில் சேர்ந்து படிப்பார். அவருக்கு முறைப்படி புத்தமதக் கல்வி கற்பிக்கப்படும்.
திபெத்திய புத்த மத கொள்கைகள், தத்துவங்கள், புத்தரின் போதனைகள் போன்றவை ராபட்னுக்குக் கற்பிக்கப்படும்
ராப்டன் புதிய மத்த மடாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், அவர் குறித்த விவரங்களை அவரின் குடும்பத்தாரிடம் புத்த மத குருமார்கள் தெரிவித்தனர். இந்தத் தகவலைக் கேட்டவுடன், ராப்டனின் பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ராப்டனின் தாத்தா கூறுகையில் “ புத்த மதத்துறவிகளுக்கு புதிய குரு முக்கியமானது, ஸ்பிதி பள்ளத்தாக்கிற்கும் முக்கியமானவர். என்னுடைய பேரன் புதிய மடாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியான தருணம்.
முஸ்லிம் என்றால் தீவிரவாதி எனக் கூப்பிடுவீர்களா? கர்நாடகப் பேராசிரியரை வெளுத்து வாங்கிய மாணவர்
புத்த துறவிகள் எங்கள் கிராமத்துக்கு வந்து, எங்கள் வீட்டுப் பிள்ளையைத் தேர்ந்தெடுத்தனர், புதிய மடாதிபதியாக தேர்ந்தெடுக்க அனுமதிதாருங்கள் என்று எங்களிடம் கேட்டனர். உடனடியாக நாங்கள் சம்மதித்துவிட்டோம். இப்போது எங்களுக்கு இது முக்கியமான தருணம்” எனத் தெரிவி்த்தார்