A few days ago when the Bharatiya Janata MPs consulted Prime Minister Narendra Modi condemned the media.

பிரதமர் நரேந்திர மோடி கேள்விகள் எழுப்புவதை விரும்ப மாட்டார் என்றும் பாரதீய ஜனதா எம்.பிக்கள் கூட்டத்தின் போது ஓபிசி அமைச்சகம் மற்றும் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக நான் கேள்வி எழுப்பியதால் மோடி மிகவும் கோபட்டார் என்றும் பாஜக எம்.பி நானா படோல் தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு பாரதீய ஜனதா எம்.பிக்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, பிரதமர் மோடி எம்.பி படோலை கண்டித்தாக ஊடகங்களில் செய்தி வெளியாது. 

இந்நிலையில், நாக்பூரில் விவசாயிகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி நானா படோல் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, எந்த ஒரு கேள்வியையும் எதிர்கொள்வதை பிரதமர் மோடி விரும்ப மாட்டார் எனவும், ஓபிசி அமைச்சகம் மற்றும் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தான் கேள்வி எழுப்பியதால் மோடி மிகவும் கோபட்டார் எனவும் தெரிவித்தார். 

எம்.பிக்கள் கூட்டத்தின் போது, பசுமை வரி, ஓபிசி அமைச்சகம் , விவசாயத்தில் மத்திய அமைச்சகத்தின் பங்கு உள்ளிட்டவை பற்றி நான் சில பரிந்துரைகளை வழங்கியதாகவும், இதனால், ஆத்திரம் அடைந்த மோடி, அமைதியாக இருக்குமாறு தன்னிடம் கோபத்துடன் கூறியதாகவும் தெரிவித்தார்.