A Candy Seller In Vijayawada Found 18 Crore Deposited In His Account And No One Knows How

ஆந்திர மாநிலம், விஜயவாடா நகரில், தெருத்தெருவாக மிட்டாய் விற்பவர் வங்கிக்கணக்கில் ரூ. 18 கோடி ெடபாசிட் செய்யப்பட்டு இருப்பதை அறிந்து அவரை வருமான வரித்துறை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஜயவாடாவில் வசித்து வருபவர் சி. கிஷோர் லால்(வயது30). இவர் வீடாகச் சென்று, மிட்டாய் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், விஜயவாடா நகரில் உள்ள ரேணுகாமாதா பன்முக கூட்டுறவு வங்கியில் கிஷோர் லால் வங்கிக்கணக்கில் ரூ.18 கோடியே 14 லட்சத்து 98 ஆயிரத்து 815 டெபாசிட்செய்யப்பட்டு இருந்தது. இந்தபணம் மும்பையில் இருந்து ஒரு கணக்கில்டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.

இதை மத்திய வருமான வரித்துறையின் நுண்ணறிவு பிரிவினர் கண்டுபிடித்த போது அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அந்த கூட்டுறவு வங்கிக்கு வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்பின், கிஷோர்லாலை விசாரணைக்கு ஆஜராகக்கோரி கடந்த மாதம் 25 ந் தேதி நோட்டீஸ்அனுப்பினர்.

இதையடுத்து வருமான வரித்துறையினர் முன்விசாரணைக்கு ஆஜரான கிஷோர் லாலிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர். ஆனால், தனக்கும், பணத்துக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால், வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து, கடந்த 10 நாட்களாக வங்கிக்கு வந்து சென்றவர்களை பார்க்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த பணம் டெபாசிட் விவகாரத்தில், கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என வருமான வரித்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.