A 23-year-old woman was kidnapped by a woman in a bus in Rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை காரில் கடத்தி சென்று 23 பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரை சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். 

அதில், தான் புதிதாக வாங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பார்வையிட்டுவிட்டு வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாகவும், அப்போது காரில் வந்த இரண்டு இளைஞர்கள் தன்னை காரில் கடத்தியதாகவும் தெரிவித்திருந்தார். 

மேலும் காரில் வைத்தே தன்னை இளைஞர்கள் இருவரும் மாறி மாறி பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் ராஜஸ்தானின் புறநகர் பகுதியில் இருக்கும் அரசு மின்வாரிய பகுதிக்கு அழைத்து சென்று வேறு ஒரு ஆறு பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இவ்வாறு தன்னை 23 பேர் இரண்டு நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்து சித்ரவதை செய்ததாகவும், அதன் பின்னர் கடத்திய இடத்துக்கே அதிகாலையில் திரும்ப கொண்டுவந்து விட்டு சென்றனர் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.