9 lakh liters of foreign liquor drink by rat

பீகாரில் போலீசாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்த 9 லட்சம் வெளிநாட்டு மதுபானங்களை எலி குடித்து தீர்த்து விட்டதாக, போலீசார் கொடுத்த அறிக்கை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பீகாரில் முதல்வராக நிதிஷ்குமார் இருந்து வருகிறார். அவர் 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தபின், மாநிலத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி உள்ளார். இதனால், மாநிலத்தில் மது வைத்து இருத்தல்,குடித்தல், கடத்தல், போன்றவை செய்தார், கடும்தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில், போலீசார் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்படும் மதுபாட்டில்கள் அனைத்தும் போலீசாரின் பாதுகாப்பு நிலையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டு இருக்கும்.

இந்நிலையில், சமீபத்தில் போலீசார் நடத்திய ஒரு ஆலோசனைக்கூட்டத்தில், போலீஸ் காப்பகத்தில் வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை போலீசாரை குடித்து தீர்த்து விட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நாளேடுகளிலும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, போலீஸ் காப்பகங்களில் உள்ள மதுபாட்டில்கள் எண்ணிக்கை மற்றும் அறிக்கையை கேட்டு போலீஸ்துறை தலைவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, போலீசார் கொடுத்த அறிக்கையை பார்த்த டி.ஜி.பி. எஸ்.கே. சிங்காலுக்கு தூக்கிவாரிப் போட்டது. அந்த அறிக்கையில், மொத்தம் போலீஸ் காப்பகத்தின் கட்டுப்பாட்டில், 9 லட்சம் லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள் இருந்தன. அந்த மதுபானங்களை எலிகள் அனைத்தும் குடித்துவிட்டதாகவும், பாட்டில்கள் மட்டுமே இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து உண்மை நிலையை விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விசாரணையில் பீகால் போலீஸ் சங்கத்தின் தலைவர் நிரமல் சிங் மற்றும் உறுப்பினர்கள் சிலர் இந்த மதுவை குடித்தும், விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 18-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.