இறைச்சிக்காக மாடுவிற்பனை செய்யத் தடை விதித்த மத்தியய அரசின் உத்தரவை எதிர்த்து கேரள மாநிலம், கண்ணூரில் கன்றுக்குட்டியை சாலையில் வெட்டிய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். 

மத்திய அரசு இறைச்சிக்காக மாடு, ஒட்டகங்களை விற்கவோ, வாங்கவோ தடை விதித்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

மாட்டுக்கறி விருந்து

இந்நிலையில் கேரள மாநிலம் கன்னூரில் கடந்த சனிக்கிழமை சாலையில் மக்கள் பார்க்கும் வகையில் கன்றுக்குட்டி ஒன்றை வெட்டி இளைஞர் காங்கிரஸ் தொண்டர்ரஜிஸ் மக்குட்டி மாட்டிறைச்சி திருவிழா நடத்தினார். மேலும், அந்த இறைச்சியை சாலையில் சென்றவர்களுக்கு இலவசமாவும் வழங்கினார். வழக்கு

இதையடுத்து. யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது போலீசார் ஐ.பி.சி. பிரிவு 120ன் கீழும், விலங்குகள் வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சஸ்பெண்ட்

இதற்கிடையே பொது இடத்தில் கன்றுக்குட்டி வெட்டியை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் கடுமையாகச் சாடிய கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அவர்களை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், கன்றுக்குட்டியை வெட்டிய இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்ரஜிஸ் மக்குட்டி உள்ளிட்ட 8 பேரை கண்ணூர் நகர போலீசார் நேற்று கைது செய்தனர்.

8 பேர் கைது

இது குறித்து கண்ணூர் நகர போலீஸ் ஆய்வாளர் கே.வி. பிரமோதன் கூறுகையில், “ கடந்த சனிக்கிழமை கண்ணூர் நகர சாலையில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் கன்றுக் குட்டியை வெட்டிய வீடியோ காட்சியை ஆய்வு செய்தோம். அந்த செயலில் 8 பேர் ஈடுபட்டு இருப்பது தெரிந்தந்து இதையடுத்து புனித மைக்கேல் பள்ளி அருகே இருந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஜிஸ் மக்குட்டி, ஜோஷி கண்டதில், சுதீப் ஜோன்ஸ், ஜஸ்டின் சண்டிகோலி, ஷராபுதீன் கட்டம்பள்ளி, டி. ஹரி,வி.கே. வருண்ஆகியோரைக் கைது செய்துள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.