லடாக் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்: 9 வீரர்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயங்களுடன் மீட்பு
லடாக் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லடாக்கில் உள்ள செங்குத்தான பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு ராணுவ வீரர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். அவருக்கும் உடலில் பலத்த காயங்கள் இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
தெற்கு லடாக்கின் நியோமா மாவட்டத்தில் உள்ள கெரே அருகே இன்று (சனிக்கிழமை) மாலை இந்த விபத்து ஏற்பட்டது. வீரர்கள் கரு காரிஸனில் இருந்து லே அருகே உள்ள கியாரிக்குச் சென்றுகொண்டிருந்தனர் என லடாக் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கியாரி நகருக்கு 7 கிமீ தொலைவில் வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்ததில் இந்திய ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர் எனவும் ஒரு வீரர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என லடாக் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ராணுவ வாகனத்தில் பத்து வீரர்கள் பயணித்திருந்த நிலையில், அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
லடாக் விபத்தில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "லடாக்கில் லே அருகே நடந்த விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. நமது தேசத்திற்கு அவர்கள் செய்த முன்மாதிரியான சேவையை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். என் எண்ணங்கள் இறந்த வீரர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்த ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்" என்று தெரிவித்துள்ளார்.
அப்பா சொன்ன வார்த்தை உண்மைதான்! லடாக்கில் பைக் ஓட்டி மகிழ்ந்த ராகுல் காந்தி நெகிழ்ச்சி!