இளமையில் வறுமையால் கல்வியைத் தொடர முடியாத 78 வயது முதியவர் 9ஆம் வகுப்பில் சேர்ந்து தினமும் 3 கி.மீ. நடந்து பள்ளிக்குச் சென்றுவருகிறார்.

கிழக்கு மிசோரமைச் சேர்ந்த 78 வயது முதியவர் லால்ரிங்தாரா, தனது பள்ளிப் படிப்பை முடிக்க வயதை தடையாகக் கருதவில்லை. பள்ளி சீருடையை அணிந்துகொண்டு புத்தகங்கள் நிறைந்த பையை ஏந்தியவாறு தனது வகுப்பறைக்கு ஒவ்வொரு நாளும் 3 கிலோமீட்டர் நடந்து செல்கிறார்.

மிசோரம் மாநிலத்தின் சம்பாய் மாவட்டத்தில் உள்ள ஹ்ருவைகான் கிராமத்தைச் சேர்ந்தவர் லால்ரிங்தாரா. இவர் ஹ்ருவைகான் கிராமத்தில் உள்ள ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் (ஆர்எம்எஸ்ஏ) உயர்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.

4000 மெகாவாட் மின் உற்பத்தி... தமிழகத்தில் 2வது கட்ட பசுமை மின்வழித்தடம் அமைக்க ரூ.719 கோடி ஒதுக்கீடு

இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள குவாங்லெங் கிராமத்தில் 1945ஆம் ஆண்டு பிறந்த லால்ரிங்தாரா தனது தந்தையின் மரணம் காரணமாக 2ஆம் வகுப்புக்குப் பிறகு தனது கல்வியைத் தொடர முடியவில்லை. அவர் ஒரே குழந்தையாக இருந்ததால், இளம் வயதிலேயே தனது தாய்க்கு ஜும் உடன் வயல்களில் உதவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் மாறிக்கொண்டே இருக்கவேண்டி இருந்தது. இறுதியாக 1995 இல் லால்ரிங்தாரா நியூ ஹ்ருய்காவ்ன் கிராமத்தில் குடியேறினார். வறுமையின் காரணமாக அவரது பள்ளி வாழ்க்கையில் பல வருடங்களை அவர் இழந்திருந்தார்.

தனது ஆங்கில அறிவை மேம்படுத்த விரும்பிய அவர் மீண்டும் பள்ளிக்குச் சென்றார். குறிப்பாக ஆங்கிலத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும், தொலைக்காட்சி செய்திகளைப் புரிந்துகொள்ளவும் தெரியவேண்டும் என்பதற்காக பள்ளிக்குச் சென்று படிக்க முடிவு செய்தார்.

"லால்ரிங்தாரா மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார். கற்றலில் ஆர்வம் உள்ள அவர் மிகுந்த பாராட்டுக்குரியவர். அனைத்து விதமான உதவிகளையும் பெற தகுதியானவர்" என்கிறார் பள்ளியின் பொறுப்பாளர் வன்லால்கிமா. தற்போது நியூ ஹ்ருவைகானில் தேவாலய பாதுகாப்பு காவலராக பணியாற்றிவரும் லால்ரிங்தாரா மிசோ மொழியில் படிக்கவும் எழுதவும் வல்லவர்.

"எனக்கு மிசோ மொழியில் படிப்பதிலும் எழுதுவதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும், ஆங்கில மொழியைக் கற்கும் என் ஆர்வம் உள்ளது. இப்போதெல்லாம், ஒவ்வொரு மொழியிலும் சில ஆங்கில வார்த்தைகள் புகுத்தப்பட்டுள்ளன. இவை என்னை அடிக்கடி குழப்புகின்றன. எனவே குறிப்பாக ஆங்கில மொழியில் எனது அறிவை மேம்படுத்துவதற்காக மீண்டும் பள்ளிக்குச் செல்ல முடிவு செய்தேன்" என்று திரு லால்ரிங்தாரா சொல்கிறார்.

ஹரியானாவில் பதற்றம்... இரவில் 2 மசூதிகள் மீது குண்டு வீசிச் சென்ற மர்ம நபர்கள்!