ஹைதராபாத் அருகே ஒன்றும் அறியாத சிறுமியை முதியவர் ஒருவர் சாக்லேட் வாங்கிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பென்டெடுத்து வருகின்றனர்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபர்த்தைச் சேர்ந்தவர் அப்துல் வகாப்.  76 வயதான இவர் தனது வீட்டின் அருகே உள்ள 13 வயது சிறுமி ஒருவரிடம் நெருங்கி பழகியுள்ளார். சிறுமியின் பெற்றோர்களும்,  வகாப் வயதில் மூத்தவர்தானே என்று அலட்சியமாக இருந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு அப்துல் வகாப்  நாள்தோறும் சாக்லேட் வாங்கிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து பல மாதங்களாக இந்த செயலில் வகாப் ஈடுபட்டுள்ளார்.

நாள்தோறும் சாக்லேட் கிடைகிறதே என அந்த சிறுமியும் முதியவரின் செயலுக்கு ஒத்துழைத்துள்ளார். அவள் பெற்றோரிடமும் இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

ஒரு நாள் திடீரென அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் வெறும் வயிற்றுவலிதான் என மருத்துவமனையில் கூறியுள்ளனர்.

ஆனால் சிறுமியை சோதனை  செய்து பார்த்த மருத்துவர்கள் அவர் 7 மாத கர்ப்பிணியாய் இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள்  போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து காவல் துறையினர் அப்துல் வகாப்பை  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.