71th independence day of india
இன்று இந்திய திருநாட்டின் 71வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். அதே போல சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடி ஏற்றி வைக்கிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி,சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய இடங்கள் போலீஸ் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடனும் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு வரும் பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்ட பிறகு, அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
சென்னை, விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
