உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூரை அடுத்த சாபியா உம்ராவ் கிராமத்தை சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70). இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். 

உத்தரபிரதேசத்தில் மகன் உயிரிழந்ததால் தனது மருமகள் பூஜாவை 70 வயது மாமனார் மறுமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூரை அடுத்த சாபியா உம்ராவ் கிராமத்தை சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70). இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். 

இந்நிலையில், கைலாஷின் 3வது மகனின் மனைவி பூஜா(28). திருமணமான சில ஆண்டுகளிலேயே பூஜாவின் கணவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, கட்டாயத்தின் அடிப்படையில் பூஜா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து மீண்டும் தனது முதல் கணவரின் மாமனார் வீட்டிற்கு வந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், 28 வயதுடைய மருமகள் பூஜாவை 70 வயதுடைய மாமனார் கைலாஷ் மறுமணம் செய்து கொண்டார். இது தெதாடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும், இருவரும் முழு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும், இந்த புதிய உறவில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக யாரேனும் புகார் அளித்தால் மட்டுமே விசாரிப்போம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.