அடிச்சு தூக்கும் இந்தியா கூட்டணி.. 13ல் 11 தொகுதிகளில் முன்னிலை.. பாஜகவின் நிலை?
மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா, மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இந்த 4 தொகுதிகளில் 3 இடங்கள் பாஜக வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 13 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 11 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் - 5, திரிணாமுல் காங்கிரஸ் - 4 , ஆம் ஆத்மி - 1, திமுக - 1 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் 3 தொகுதிகள், உத்தரகாண்டில் பத்ரிநாத் மற்றும் மங்களூர், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, தமிழகத்தில் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த 13 தொகுதிகளில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா, மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இந்த 4 தொகுதிகளில் 3 இடங்கள் பாஜக வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இமாச்சல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர், நலகர் ஆகிய 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையிலும், உத்தரகாண்டின் பத்ரிநாத், மங்களூர் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையிலும், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையிலும், தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக முன்னிலையிலும் உள்ளது. மத்திய பிரதேசத்தின் அமர்வாரா தொகுதி பாஜக முன்னிலையிலும், பீகாரில் ரூபாலி தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் முன்னிலையில் உள்ளது. ஒட்டுமொத்தமாக 13 தொகுதி இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் - 5, திரிணாமுல் காங்கிரஸ் - 4 , ஆம் ஆத்மி - 1, திமுக - 1, பாஜக- 1, ஐக்கிய ஜனதா தளம்- 1 ஆகிய இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.