Asianet News TamilAsianet News Tamil

Heavy Rain : மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

மால்டாவில் பள்ளிக்கு அருகே மின்னல் தாக்கியதில் 7 பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

7 people including 3 children were died by lightning in malda,  West Bengal!
Author
First Published Jun 22, 2023, 10:46 AM IST

மேற்கு வங்கம் மாநிலம், மால்டா மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, கையாசாக் பகுதியில் பள்ளிக்கு அருகே இடி மின்னல் தாக்கியதில் 6 பேரும் பழைய மால்டாவில் ஒருவர் என மொத்தம் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக, மாவட்ட நீதிபதி நிதின் சிங்கானியா கூறியதாவது, “ தொடர்ந்து பெய்து வரும் மழையால், மால்டாவைத் தாக்கிய மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையின் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் கிருஷ்ணோ சௌத்ரி (வயது 65), உம்மே குல்சும் (வயது 6), டெபோஸ்ரீ மண்டல் (வயது 27), சோமித் மண்டல் (வயது 10), நஜ்ருல் எஸ்கே (வயது 32), ராபிசன் பீபி (வயது 54), மற்றும் ஈசா சர்க்கார் (வயது 8) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இடி மின்னல் தாக்கியதில் 9 கால்நடைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மால்டாவில் உள்ள பாங்கிடோலா உயர்நிலைப் பள்ளிக்கு அருகே, பள்ளி வேளையின் போது மின்னல் தாக்கியது. இதில்12 பேர் பாதிக்கப்பட்டு, காயமடைந்த மாணவர்கள் பாங்கிடோலா கிராமப்புற அரசு மருத்துவமனை மற்றும் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேரழிவை ஏற்படுத்திய பிபர்ஜாய் புயல்.. ராஜஸ்தானில் 8 பேர் உயிரிழப்பு, 17,000 பேர் இடம்பெயர்ந்தனர்..

இடி மின்னலால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆதரவுகள் வழங்கப்பட்டு வருவதாக நிதிபதி நிதின் சிங்கானியா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில், அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான முதல் கடுமையான மழை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என மேற்கு வங்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios