பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்று காலை குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 7 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்று காலை குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 7 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து அங்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர்.கடந்த சில நாட்களாக வீட்டின் அருகில் உள்ள நகரட்சி குப்பை கிடங்கில் குப்பையினர் எரிந்துள்ளனர். அதிலிருந்து குடிசை வீட்டில் தீப்பொறி விழுந்து, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கணவன், மனைவி, 4 பெண் குழந்தைகள், 2 வயதான ஒரு ஆண் குழந்தை உள்ளிட்டோர் தீவிபத்தில் பரிதாப உடல் கருகி பலியாகியுள்ளனர்.

அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்தானது நிகழந்துள்ளது. தீ விபத்தில் பலியான குடும்பத்தில் 17 வயது சிறுவன் மட்டும், சம்பவதன்று வீட்டில் இல்லாததால் உயிர் பிழைத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். ஆனால், அதற்குள் 7 பேரும் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.தீ விபத்தில் உயிரிழந்தவர்கள், பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும், சம்பவம் நடந்தபோது அவர்கள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.