Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கொண்டாட்டம்... ஒருத்தரைக்கூட விடாமல் தூக்கும் காவல்துறை..!

உத்தரபிரதேச காவல்துறை 5 மாவட்டங்களைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை காவலில் எடுத்துள்ளது.

7 booked, 4 in custody of UP Police for celebrating Pak's WC win against India:
Author
Rajasthan, First Published Oct 27, 2021, 6:08 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

அக்டோபர் 24 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை கொண்டாடியதற்காகவும் அந்நாட்டுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியதாக உத்தரபிரதேச காவல்துறை 5 மாவட்டங்களைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை காவலில் எடுத்துள்ளது.7 booked, 4 in custody of UP Police for celebrating Pak's WC win against India:

இந்த அறிக்கையை மாநிலத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் இன்று பகிர்ந்து கொண்டது. அந்த அறிக்கைகளின்படி, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 504/506 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 (எஃப்) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஜம்மு- காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதே போன்ற கொண்டாட்டங்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற செய்திகளுக்கு மத்தியில் யோகி ஆதித்யநாத் அரசின் அறிக்கை வந்துள்ளது.7 booked, 4 in custody of UP Police for celebrating Pak's WC win against India:

பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதாக ஸ்ரீநகரில் உள்ள இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆர்) பதிவு செய்த நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் எழுதிய அரசாங்க ஊழியர்கள் உடனடி பணி நீக்கம் செய்யப்படுவதாக உபி முதலமைச்சர் அதிரடியாக அறிவித்து இருந்தார். 

அக்டோபர் 25 அன்று, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீரஜா மோடி பள்ளியின் ஆசிரியை நஃபிசா அதாரி என்ற ஆசிரியையின் வாட்ஸ்அப் பதிவு சமூக ஊடக தளங்களில் வைரலாகத் தொடங்கியது. பதிவில், அடாரி, “ஜீத் கயே, நாங்கள் வென்றோம்” என்ற உரையுடன் பாகிஸ்தான் வீரர்களின் படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்காக நபீசா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். சோஜாதியா அறக்கட்டளையின் கூட்டத்தின் போது நீரஜா மோடி பள்ளியின் ஆசிரியை நஃபிசா அதாரி உடனடியாக பள்ளியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று ஹிந்தியில் நோட்டீசு எழுதப்பட்டுள்ளது.ஆனால் , பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிவிப்பில் குறிப்பிடவில்லை.7 booked, 4 in custody of UP Police for celebrating Pak's WC win against India:

ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவுடன் பட்டாசுகள் வெடித்ததுடன் பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களும் ஸ்ரீநகர் நகரம் மற்றும் பிற நகரங்களில் ஒலித்தன. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரில் மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு அமித் ஷா பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கத்தை விமர்சிக்கும் பதிவுகளுக்காக பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தனிநபர்களுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.7 booked, 4 in custody of UP Police for celebrating Pak's WC win against India:

இந்தியாவுக்கு எதிரான எந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றாலும், காஷ்மீர் மக்கள் நீண்ட காலமாகவே தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறினாலும், பிரதமர் நரேந்திர மோதியின் அதிகாரம் மிக்க அமைச்சரான அமித் ஷா ஊரில் இருந்தபோது, கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் வெற்றியை மக்கள் கொண்டாடியது அதிகாரிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனால் கைது எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios