Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட 7.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!!

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திச் சென்ற 7.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சுங்கவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7.5 crore worth Gold smuggling from Tamil Nadu to Andhra seized by customs officials
Author
First Published Mar 23, 2023, 10:35 AM IST

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. இதையடுத்து தொடர்ந்து அவர்கள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று சுங்கவரி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து விஜயவாடா ரயில்  நிலையத்தில் கண்காணித்து வந்தனர்.

முதலில் மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. இவர்க;ளிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மேலும் ஒருவர் கைது செயயப்பட்டார். அவரிடம் இருந்து 8 கிலோ தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 30 அதிகாரிகள் இந்த அதிரடி வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். 

ஓசூரில் படுஜோராக அரங்கேரிய விபசாரம்; 3 பெண்கள் மீட்பு - ஓட்டல் உரிமையாளர் கைது

ஏறக்குறைய 13 கிலோ தங்கம் 15 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து தற்போது சுங்கவரி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2022-23 ஆம் ஆண்டில் விஜயவாடா சுங்கவரி அதிகாரிகள் சுமார் ரூ. 19.75 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்து இருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios