Asianet News TamilAsianet News Tamil

இது வயிறா? கல் குவாரியா? முதியவரின் வயிற்றில் இருந்து 6,000 கற்கள் அகற்றம்

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் 70 வயது முதியவர் ஒருவரின் பித்தப்பையில் இருந்து 6,000க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ளன. கற்களின் அளவு கடுகு முதல் பச்சை பயறு மற்றும் கடலைப் பருப்பு வரை இருந்தது.

6000 Gallstones Removed From 70-Year-Old Man in Kota
Author
First Published Sep 8, 2024, 12:05 AM IST | Last Updated Sep 8, 2024, 12:14 AM IST

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தின் தல்வண்டி பகுதியில் இருந்து திடுக்கிடும் செய்தி ஒன்று வந்துள்ளது. 70 வயது முதியவர் ஒருவரின் வயிற்றில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றின் அளவு கடுகு முதல் பச்சை பயறு வரை இருந்தது. அவற்றை எண்ணுவதற்கே மருத்துவமனை ஊழியர்களுக்கு இரண்டரை மணி நேரத்திற்கும் மேல் ஆனதாக சொல்லப்படுகிறது. அந்த முதியவர் பல நாட்களாக வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவரது பித்தப்பை அதன் அசல் அளவை விட ஒன்றரை மடங்கு விரிவடைந்திருப்பது தெரியவந்தது. அதன் பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.‌

10வது பாஸ் போதும்: இஸ்ரோவில் ரூ.69,000 சம்பளத்தில் வேலை

முதியவருக்கு மயக்க மருந்து கொடுத்து வயிற்றில் இருந்து இத்தனை கற்களை அகற்றினர்

இது தொடர்பாக தல்வண்டி பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் ஜிண்டால் கூறுகையில், நோயாளி பல நாட்களாக அவதிப்பட்டு வந்தார். ஸ்கேன் செய்து பார்த்ததில், பித்தப்பையின் அளவு 12.4 செ.மீ இருந்தது. ஆனால், ஆரோக்கியமான பித்தப்பை சுமார் 7 செ.மீ அளவில் இருக்கும். நோயாளியை நேற்று அறுவை சிகிச்சைக்கு அழைத்தோம். அதற்கு முன்பு அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அதன் பிறகு, லாப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சுமார் 1 மணி நேரத்தில் 6,110க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டன. இந்தக் கற்களை அனைத்தையும் ஒரு பொட்டலத்தில் வைத்து ஊழியர்களிடம் கொடுத்தோம். அவற்றை எண்ணுவதற்கே சுமார் இரண்டரை மணி நேரம் ஆனது. 

வீட்டு கரண்ட் பில் ஒவ்வொரு மாசமும் ஷாக் அடிக்குதா? இந்த வழிய பாலோ பண்ணுங்க செலவு பாதியாகிடும்

பித்தப்பையில் கற்கள் நிரம்பி இருந்தன

மருத்துவர் ஜிண்டால் கூறுகையில், சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் மற்றொரு நோயாளி வந்திருந்தார். அவருக்கு 45 வயது. அவரது பித்தப்பையில் இருந்து சுமார் 5,000 கற்கள் அகற்றப்பட்டன. சரியாக சாப்பிடாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் இது போன்ற பல காரணங்களால் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால், தற்போது அந்த முதியவர் முழுமையாக குணமடைந்து விட்டார். இனி அவருக்கு பித்தப்பை கற்கள் பிரச்சனை வராது என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios