கேரளாவில் தெருநாய் கடித்த சிறுமிக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டும் உயிரிழப்பு. கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆறு வயது சிறுமி மரணம்.
கேரள மாநிலம் திருரங்கடியில் உள்ள பெருவள்ளூரில் காகத்தடம் பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி போடப்பட்ட போதிலும் உயிரிழந்தார். ஜியா ஃபாரிஸ் என்ற சிறுமி, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார்.
மார்ச் 29ஆம் தேதி இனிப்புகள் வாங்க வெளியே சென்றபோது, ஜியாவை ஒரு தெருநாய் கடித்ததில் அவரது தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே நாளில், அப்பகுதியில் உள்ள மேலும் ஏழு பேர் தெருநாய்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் திருரங்கடி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜியா, பின்னர் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இன்ட்ராடெர்மல் ரேபிஸ் தடுப்பூசி (IDRV) செலுத்தப்பட்டது. அவரது தந்தை சல்மான் ஃபரிஸின் கூற்றுப்படி, மருத்துவர்கள் முதல் டோஸ் கொடுத்த பிறகு அவரை டிஸ்சார்ஜ் செய்து, தொடர்ந்து பரிசோதனைக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
எலெக்ட்ரானிக் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு ரூ.23,000 கோடி திட்டம்! 91,600 வேலைவாய்ப்புகள்!
“இரண்டாவது முறை மருத்துவமனைக்குச் சென்றபோது காயங்களுக்கு சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பினர். அவர் குணமடைந்து வருவதாக நாங்கள் நம்பினோம், ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பு, அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போதுதான் குழந்தைக்கு ரேபிஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது” என்று குழந்தையின் தந்தை தெரிவிக்கிறார்.
சிறுமி இறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு ஐசியுவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவப் பராமரிப்பில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேவையான அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும், ஜியாவுக்கு உடனடி முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர். எந்த வகையிலும் அலட்சியமாக இருக்கவில்லை என்றும் மருத்துவர்கள் மறுக்கின்றனர். இதனிடையே, அதே நாய் கடித்த மற்ற நபர்களில் யாருக்கும் இதுவரை ரேபிஸ் அறிகுறிகள் இல்லை என்று மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! எந்த தேதி தெரியுமா?
