திரிபுரா மாநிலத்தில் மாணிக் சர்க்காரை முதல்வராக கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதிப் ராய் பர்மன் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓட்டு போட்டதால், திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேற்கண்ட 6 எம்.எல்.ஏ.க்களும் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று நடைபெற்ற பிரமமாண்ட பொதுக்கூட்டத்தில் பாஜகவில் முறைப்படி இணைந்தனர். அவர்களுடைய ஆதரவாளர்கள் 25 ஆயிரம் பேரும் பாஜகவில் சேர்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில், மாணிக் சர்க்கார் அரசை அகற்ற முழுமுயற்சி எடுப்போம் என்று பேசினார்.