Jammu: Narwal:ஜம்மு காஷ்மீரில் 2 மர்மபொருட்கள் வெடித்ததில் 6 பேர் காயம்: ராகுலின் பாரத் ஜோடோ யாத்ரா நடக்குமா?
ஜம்மு காஷ்மீரின் நார்வால் பகுதியில் இன்று காலை இரு சக்தி வாய்ந்த மர்ம பொருட்கள் வெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர் என பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் நார்வால் பகுதியில் இன்று காலை இரு சக்தி வாய்ந்த மர்ம பொருட்கள் வெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர் என பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பால் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தி வரும் பாரத் ஜோடோ யாத்ரா பாதிக்குமா அல்லது தடைபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெறிப்பிடித்த பாஜக எம்.எல்.ஏ! கொடூர சம்பவம்.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!
ஜம்முவின் நார்வால் பகுதியில் இன்று காலை திடீரென சக்திவாய்ந்த இரு பொருள்கள் வெடித்துச் சிதறின. இந்த வெடிவிபத்தில் 6 பேர் காயமடைந்தனர். இது குறித்து ஜம்மு ஏடிஜிபி முகேஷ் சிங் கூறுகையில் “ நார்வால் பகுதியில் இன்று காலை 2 சக்திவாய்ந்த பொருட்கள் வெடித்துச் சிதறின. இந்த வெடிவிபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெடித்த இரு பொருட்களும் வெடிகுண்டுகளா அல்லது வேறுஏதாவது வெடித்ததா என்பது குறித்து போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். வெடிகுண்டு வெடித்ததா என்பதை உறுதியாகக் கூற முடியாது” எனத் தெரிவித்தார்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ நடைபயணம் சென்று வருகிறார். ராகுல் காந்தியின் நடைபயணம் ஜம்மு காஷ்மீரைநேற்று அடைந்துள்ளன.
கொசுறு! 30 லட்சம் காலியாக இருக்கு! 71,000 பேருக்குத்தான் வேலையா: காங்கிரஸ் விளாசல்
இந்த சூழலில் ஜம்மு பகுதியில் இரு மர்ம பொருட்கள் வெடித்துச் சிதறியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் ராகுல் காந்தி நடைபயணம் தொடர்ந்து நடக்குமா அல்லது பாதுகாப்புச் சிக்கல் ஏதேனும் ஏற்பட்டு தடை ஏற்படுமா என்பது தெரியவில்லை. இதையடுத்து ராகுல் காந்தி யாத்ராவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது