8 வயது சிறுமி.. வெறிப்பிடித்த பாஜக எம்.எல்.ஏ! கொடூர சம்பவம்.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!

எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

Arrest Warrant Against Uttar Pradesh BJP MLA In 8-Year-Old girl Rape Case

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் துத்தி சட்டமன்ற தொகுதி பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

பலமுறை சம்மன் அனுப்பியும், சட்டமன்ற உறுப்பினர் ராம்துலர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், கூடுதல் அமர்வு நீதிபதி ராகுல் மிஸ்ரா வியாழக்கிழமை கைது வாரண்ட் பிறப்பித்தார். சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடியாக பிடிவாரண்ட்டை பிறப்பித்துள்ளது.

Arrest Warrant Against Uttar Pradesh BJP MLA In 8-Year-Old girl Rape Case

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

உதவி மாவட்ட அரசு ஆலோசகர் சத்ய பிரகாஷ் திரிபாதி இதுபற்றி கூறும்போது, மையர்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், 2014 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, அப்போதைய கிராமத் தலைவரின் கணவர் ராம்துலர், தனது சகோதரியை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், இது வெளியே தெரிந்தால் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளார். 

இதேபோல பலமுறை எனது தங்கை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.  எனவே அவளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் போலீசில் புகார் செய்தார். முதலில் இந்த புகார் மீது விசாரணை மெதுவாக நடைபெற்றது. பிறகு  தீவிர விசாரணைக்கு பின் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Arrest Warrant Against Uttar Pradesh BJP MLA In 8-Year-Old girl Rape Case

ராம்துலருக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும், உடல்நலக் காரணங்களுக்காக அவர் ஆஜராகவில்லை என்று திரிபாதி கூறினார். பலமுறை சம்மன் அனுப்பியும், சட்டமன்ற உறுப்பினர் ராம்துலர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், கூடுதல் அமர்வு நீதிபதி ராகுல் மிஸ்ரா வியாழக்கிழமை கைது வாரண்ட் பிறப்பித்தார்.  துத்தி சட்டமன்ற தொகுதி பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..தமாகாவிடம் இருந்து தொகுதியை நைசாக தூக்கிய எடப்பாடி.. ஈரோடு கிழக்கில் இரட்டை இலை? Vs தாமரை? பாவம் ஓபிஎஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios