Here 13 Cities May Get  5G First in India : இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஏலம் ஜூலை மாத இறுதியில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. 

இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கான பரிந்துரையை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. 

அதன் படி 20 ஆண்டுகள் வேலிடிட்டி கொண்ட 72094.85 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் ஜூலை மாத வாக்கில் நடைபெற உள்ளது. இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஏலம் ஜூலை மாத இறுதியில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த ஏலத்தில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்கேற்கின்றன.

மாத தவணையில் ஸ்பெக்ட்ரம் கட்டணம்:

5ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் எடுக்கும் நிறுவனங்கள் அதற்கான முழு தொகையை 20 மாதங்கள் வரையிலான மாத தவணை முறையில் செலுத்த அனுமதிக்கப்படுவர் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஏலத்தை தொடர்ந்து 5ஜி சேவை வெளியீடு நடைபெறும். புதிய 5ஜி நெட்வொர்க் 4ஜி நெட்வொர்க்கை விட பத்து மடங்கு அதிவேகமானது ஆகும். 

முழு 5ஜி தொழில்நுட்பத்திற்கும் ஸ்பெக்ட்ரம் மிக முக்கிய அங்கம் ஆகும். வரவிருக்கும் புதிய 5ஜி சேவைகளானது புதிய தலைமுறை வியாபாரங்களை உருவாக்க வழி செய்வதோடு, நிறுவனங்கள் கூடுதல் வருவாய் ஈட்ட வழி வகுக்கும். இதோடு வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. 

5ஜி தொழில்நுட்பம்:

டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் மிட் மற்றும் ஹை பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்தி 5ஜி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வெளியிடும் என தெரிகிறது. இவை தற்போதைய 4ஜி சேவைகளை விட பத்து மடங்கு அதிவேகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் வாங்கும் நிறுவனங்கள் பத்து ஆண்டுகள் கழித்து அவற்றை எந்த விதமான நிபந்தணைகளும் இன்றி திரும்ப வழங்க முடியும். 

மொபைல் சேவைகளுக்கான 5ஜி ஸ்பெக்ட்ரத்தின் அடிப்படை விலையில் 39 சதவீதம் வரை குறைக்க முடியும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கடந்த ஏப்ரல் மாத வாக்கில் பரிந்துரை வழங்கி இருந்தது.