500 rupess rain in kerala

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு சாலையில் திடீரென 500 ரூபாய் நோட்டுகள் வானத்தில் பறந்தது. இதனை சற்றும் எதிர் பார்க்காத பொதுமக்கள் ஒரு சில நிமிடம் காசுகளை எடுக்க யோசித்தாலும், பின் போட்டி போடுக்கொண்டு 500 ரூபாய் நோட்டுக்களை அள்ளி சென்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே சாத்தனூர் பாரிப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு சாலையில் நேற்று முன்தினம் 500 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து வந்தன.

இதனை அப்பகுதி மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ள ஆரம்பித்தால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை செய்வதற்குள் காசுகளை பலர் அள்ளிக்கொண்டு புறப்பட்டு விட்டனர். 

பின் கையில் கிடைத்த சில நோட்டுகளை, போலீசார் பரிசோதனை செய்த போது, அவை அனைத்தும் புதிய ஒரிஜினல் 500 ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், யாராவது வாகனத்தில் எடுத்துச் சென்றபோது பணம் பரந்திருக்கும் என்று கூறப்படுகிறது.