Asianet News TamilAsianet News Tamil

விளையாடும்போது பிளாஸ்டிக் வலையில் சிக்கி உயிரிழந்த 5 வயது சிறுவன்; மும்பையில் துயர சம்பவம்

சிறுவனை வலையில் இருந்து விடுவித்து உடனடியாக அருகில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் சக்‌ஷாம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

5-yr-old boy dies as neck gets caught in Mumbai building's playzone net sgb
Author
First Published Nov 2, 2023, 5:32 PM IST | Last Updated Nov 2, 2023, 5:32 PM IST

மும்பையில் குழந்தைகள் விளையாட்டு பூங்காவில் பிளாஸ்டிக் வலையில் கழுத்து சிக்கியதால் ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோம்பிவிலி (கிழக்கு) பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இந்தத் துயரச் சம்பவம் நடத்துள்ளது.

சக்‌ஷாம் உண்டே என்ற 5 வயது சிறுவனின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, பின்னணியைக் கண்டறிய குடியிருப்பில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சக்‌ஷாம் உண்டே அவரது பெற்றோருக்கு ஒரே குழந்தை. அவரது தந்தை, பாரத் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். செவ்வாயன்று சக்‌ஷாம் தனது தாயுடன் விளையாட்டுப் பூங்காவுக்குச் விளையாடிக்கொண்டிருந்தார் என போலீசார் கூறுகின்றனர்.

"விளையாடும் இடத்திற்குள் பெற்றோர் அனுமதிக்கப்படாததால், குழந்தையின் தாய் வெளியில் காத்திருந்தார். விளையாடும் இடத்தை இரண்டு பராமரிப்பாளர்கள் கண்காணித்து வந்தனர். திடீரென, விளையாடிக்கொண்டிருந்த சக்‌ஷாமின் கழுத்தில் ஒரு பிளாஸ்டிக் வலை சிக்கியது. அடுத்த சில நொடிகளிலேயே சிறுவன் மயங்கி விழுந்துவிட்டான்" என் போலீசார் தெரிவிக்கின்றனர்.

பராமரிப்பாளர்கள் சிறுவனை வலையில் இருந்து விடுவித்து உடனடியாக அருகில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் சக்‌ஷாம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இதுபோல 2016இல், எட்டு வயது சிறுமி, கல்யாணில் உள்ள ரோசாலியில் நீச்சல்குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். மே 2018இல், டோம்பிவிலியில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல்குளத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios