5 terrorists shot dead in Jammu-Kashmir

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Uri வழியாக ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 

பாகிஸ்தான் பகுதியில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவும் முயற்சியில் தீவிரவாதிகள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களாக ஊடுருவல் அதிகரித்துள்ளது. இந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. 

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வழியாக ஊடுருவ முயற்சிக்கும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவத்தினரும், பாதுகாப்பு படையினரும் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Uri பகுதியாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற கடும் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், சக்திவாய்ந்த வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு காஷ்மீரில் 15 நாட்களுக்குள் 7 முறை ஊடுருவல் முயற்சியை முறியடித்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 23 ஊடுருவல் முயற்சியை முறியடித்து, ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த 39 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.