நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரும், நடிகையுமான மீரா சோப்ரா தமிழில் இசை, கில்லாடி, லீ, ஜாம்பவான், மருதமலை, காளை, ஜகன் மோகினி ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

மீரா சோப்ரா  5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக கூறி இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இன்ஸ்டகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள  ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு தான் உணவருந்தச் சென்றதாகவும், அப்போது தனக்கு வழங்கப்பட்ட உணவில் உயிருடன் புழுக்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

உணவில் புழுக்கள் நெளிந்தபடி இருந்ததால், தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ள அவர், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.