ஆலப்புழாவில் நடந்த பயங்கர விபத்து; 5 மருத்துவ மாணவர்கள் பலி!

ஆலப்புழா அருகே நிகழ்ந்த கோரமான கார் விபத்தில் ஆலப்புழா மருத்துவக் கல்லூரியின் ஐந்து முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் உயிரிழந்தனர். 

5 MBBS Students Killed in Alappuzha Car Bus Collision

கேரள மாநிலத்தில் அரசு பேருந்துடன் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. நேற்றிரவு நடந்த விபத்தில் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் 5 பேரும் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தனர்கள் கோட்டயத்தைச் சேர்ந்த ஆயுஷ் ஷாஜி (19), பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்ரீதீப் வத்சன் (19), மலப்புரத்தைச் சேர்ந்த பி. தேவானந்தன் (19), கண்ணூரைச் சேர்ந்த முகமது அப்துல் ஜப்பார் (19), லட்சத்தீவைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று இரவு 9 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த டவேரா கார், கட்டுப்பாட்டை இழந்து, குருவாயூரில் இருந்து காயம்குளம் சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்துடன் மோதியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

போனில் '1' அழுத்திய இன்ஜினியர்; ரூ.1 லட்சத்தை இழந்த சம்பவம்!

கனமழை காரணமாக ஓட்டுநரின் பார்வை மங்கலானதே இந்த விபத்துக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. முந்திச் செல்ல முயன்றபோது ஓட்டுநருக்கு பார்வை தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேஎஸ்ஆர்டிசி அதிவிரைவுப் பேருந்துடன் மோதியதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த ஐந்து மாணவர்களின் உடற்கூராய்வு இன்று காலை வந்தனம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. உடற்கூராய்வுக்குப் பிறகு, உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, மருத்துவக் கல்லூரியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.

இந்த விபத்தில் கார் உடைந்ததில் மருத்துவ மாணவர்கள் வாகனத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்ற இருவர் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

பணத்தை எண்ண 36 இயந்திரங்கள்; இந்தியாவின் மிகப்பெரிய ஐடி ரெய்டு - எவ்வளவு பணம் தெரியுமா?

விபத்தில் காயமடைந்த மேலும் இரண்டு மருத்துவ மாணவர்கள் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நிகழும்போது காரில் 11 மாணவர்கள் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனமழை, அதிக நபர்கள் காரில் சென்றது ஆகியவை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று மண்டல போக்குவரத்து அலுவலர் (RTO) தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios