பெங்களூரு  எச்ஏஎல் நிறுவனம் முப்படைகளுக்கு தேவையான போர் விமானங்கள்,  ஹெலிகாப்டர்கள், கனரக வாகனங்களை சிறந்த முறையில் தயாரித்து வழங்கி  வருகிறது.

ஆனால் ரஃபேல் போர் விமானங்கள் தயாரிக்கும் பணியை மத்திய அரசு இந்த HAL  நிறுவனத்துக்கு  கொடுக்காமல் அனில் அம்பானி நிறுவனதுக்கு வழங்கியது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின.

இந்நிலையில்  45 ஆயிரம் கோடி ரூபாயில்  83 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க எச்.ஏ.எல்., நிறுவனத்துடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம் கையெழுத்தானது.
 உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்நிறுவனம் தயாரித்த 16 தேஜஸ் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பாகிஸ்தானிடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளதால் தேஜஸ் போர் விமானங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது.