Asianet News TamilAsianet News Tamil

Monkey Killings: 45 குரங்குகள் அடித்து, துன்புறுத்தி கொன்று கூட்டமாகப் புதைப்பு! ஆந்திராவில் கொடூரச் செயல்

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 45 குரங்குகளை அடித்து, உதைத்து துன்புறுத்தி கூட்டமாக கொன்று புதைத்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. 

45 monkeys that were found dead in Andhra Pradesh
Author
First Published Nov 16, 2022, 3:47 PM IST

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 45 குரங்குகளை அடித்து, உதைத்து துன்புறுத்தி கூட்டமாக கொன்று புதைத்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. 

இந்த குரங்குகள் அனைத்தும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கவிதி தாலுகாவுக்கு உட்பட்ட சிலாகம் கிராமத்தில் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

WHO தலைமை அறிவியல் வல்லுநர் பொறுப்பில் இருந்து தமிழகத்தின் செளமியா சுவாமிநாதன் ராஜினாமா

இந்த குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதலில் தகவல் பரவியது. இதையடுத்து, குரங்குகள் உடலை உடற்கூறு ஆய்வுசெய்ததில் விஷம் வைத்து கொல்லப்படவில்லை, ஆயுதங்களால் பலமாகத் தாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டன என்று தெரியவந்துள்ளது.

குரங்குகள் கூட்டமாக இறந்து கிடந்தது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்த போலீஸார், வனத்துறையினர், விஷம் கலந்த வாழைப்பழத்தை குரங்குகளுக்கு கொடுத்திருக்கலாம் என சந்தேகித்தனர்.
இதையடுத்து கால்நடை மருத்துவர் ஸ்ரீஷா தலைமையில் குரங்குகள் உடலை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்ததில் விஷம் ஏதும் உடலில் கலக்கவில்லை எனத் தெரியவந்தது.

டெல்லி எய்ம்ஸ் அவலம்! ஆப்ரேஷன் முடிந்து சிறுமி சாப்பிட்ட முதல் உணவில் கரப்பான்பூச்சி

இது குறித்து கால்நடை மருத்துவர் ஸ்ரீசா கூறுகையில் “ குரங்குகள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் விஜயவாடாவில் உள்ள கால்நடை உயிரி ஆய்வு மையத்துக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் குரங்குகள் உடலில் விஷம் இல்லை எனத் தெரியவந்தது. குரங்குகள் ஏதாவது பொருளால் தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம். குரங்குகளின் உள்உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளதால் சந்தேகிக்கிறோம்.

இந்த குரங்குகளை வலை மூலம் பிடித்து அதை கொடுமைப்படுத்தி கொலை செய்திருக்கலாம். குரங்குகள் தொல்லை தாங்க முடியாதவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம்” எனத் தெரிவித்தார்
இந்த குரங்குகள் அனைத்தும் அண்டை மாநிலமான ஒடிசாவில் கொல்லப்பட்டு ஆந்திராவுக்குள் கொண்டுவந்து புதைத்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையடுத்து, ஸ்ரீகாகுளம் போலீஸார், வனத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios