4 வயது சிறுவன்; உயிரை குடித்த சாக்லேட் - என்ன நடந்தது? பெற்றோர்களே கவனமாய் இருங்க!

4 Year Old Chokes to Death : கான்பூரில் 4 வயது சிறுவன் உண்ட சாக்லேட் அவன் தொண்டையில் சிக்கிய நிலையில் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 year old kid died after candy struck in throat ans

இன்றைய காலத்தில் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே சாக்லேட், பிஸ்கட் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகளில் பூச்சி போன்ற விஷயங்கள் காணப்படுவதால், சாக்லேட்களை கூட நம்பி உட்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், டோஃபி என்ற மிட்டாய் தொண்டையில் சிக்கிய நிலையில், 4 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் அதிர்ச்சி தரும் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) மாலை பர்ரா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பர்ரா ஜரௌலி பகுதியில் தான் நிகழ்ந்தது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இறந்த அந்த 4 வயது சிறுவன் ஃப்ரூடோலா என்ற அந்த மிட்டாயை சாப்பிட்டு கொண்டிருந்தான், இந்த மிட்டாய் மனிதனின் கண் வடிவம் கொண்ட மிட்டாயாகும். கொஞ்சம் பெரிதாக உள்ள அந்த மிட்டாய் அந்த சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளது. அந்த மிட்டாயை அருகில் உள்ள கடையில் இருந்து அந்த சிறுவன் வாங்கியதாக கூறப்படுகிறது.

மகா கும்பமேளாவில் சந்திரசேகர் ஆசாத்தின் துப்பாக்கி, பழங்கால ஆயுதங்கள்- கலக்கும் யோகி

சோனாலிகா என்று அடையாளம் காணப்பட்ட அந்த சிறுவனின் தாயார், உடனே அந்த குழந்தையின் முதுகில் நன்றாக தட்டுவதற்கு பதிலாக பதட்டத்தில் அந்த சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். அதன் காரணமாக அந்த மிட்டாய் மேலும் சிறுவனின் தொண்டையில் கொஞ்சம் ஆழமாக சென்றுள்ளது. இதனால் அந்த 4 வயது சிறுவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த சிறுவன் கொண்டுசெல்லப்பட் நிலையில் அங்குள்ள மருத்துவர்களாலும் அந்த மிட்டாயை அகற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு விடுப்பில் சென்றதால், டாக்டர்கள் மருத்துவமனைக்கு வரவில்லை என குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அந்த சிறுவனை மேலும் மூன்று, நான்கு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்களால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இறுதியில் வெகு நேரம் தொண்டையில் மிட்டாய் சிக்கியதால் குழந்தை மூச்சுத் திணறி இறந்தது. சுமார் மூன்று மணி நேரம் போராடி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. டோஃபி தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுவனுக்கு மிட்டாய் கொடுத்த கடைக்காரர் கடையை மூடிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. கடைக்காரரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்த வழக்கை விசாரித்து, அந்த மிட்டாய் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, உணவுத் துறைக்கு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனடா; தாக்கப்பட்ட ஹிந்து கோவில் - கோழைத்தனம் என்று கூறி கண்டித்த பிரதமர் மோடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios