4 pakistan terrorist shot dear by Indian army

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள சம்பல் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படை முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிராதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 இன்று அதிகாலை 4 மணிக்கு இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் 4 பேர் சம்பல் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படையின் 45 படைப்பிரிவு முகாம் மீது தாக்குதல் நடத்தினர்.

திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலையடுத்து, இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயற்சி செய்த தீவிரவாதிகள் 4 பேரை பாதுகாப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். 

உயிரிழந்த 4 தீவிரவாதிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.