4 arrested for raping a college student!
பெங்களூரில் கல்லூரி மாணவி ஒருவரை லாட்ஜில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர், ஒயிட்பீல்டு ரயில்நிலையம் அருகே உள்ள கிளாசிக்கல் இன் ஓட்டலில் 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் 10 நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் பெற்றோரின் புகாரை அடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர் 10 நாட்களுக்குப் பிறகு, அந்த பெண் மீட்கப்பட்டாள். அந்த மாணவியிடம் போலீசார் விசாரித்தபோது, சக நண்பர் ஒருவர் அழைப்பதாக நண்பர்கள் மூவர் அழைத்து சென்றதாகவும், பின்னர்தான் தான்
கடத்தப்பட்டதை அறிந்ததாகவும் கூறினார். மேலும் லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டு பலாத்காரம் செய்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.
அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம், ஓட்டர் உரிமையாளர் பண்டிட்டுக்கும் தெரியவந்துள்ளது. மாணவியை லாட்ஜ் உரிமையாளரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து, மாணவியின் நண்பர்கள் ராகவேந்திரா (27), சாகர் (22), மஞ்சுராஜ் (32), மனோரஞ்சன் பண்டிட் (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
