சூடானில் இருந்து 366 இந்தியர்கள் பெங்களூர் திரும்பினர்... அதில் 52 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்!!
சூடானில் இருந்து ஆப்ரேஷன் காவிரி மீட்பு பணியின் மூலம் சிறப்பு ராணுவ விமானத்தில் 366 இந்தியர்கள் மீட்கப்பட்டு பெங்களூரு விமான நிலையம் அழைத்து வரப்பட்டன. அதில் 52 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
சூடானில் இருந்து ஆப்ரேஷன் காவிரி மீட்பு பணியின் மூலம் சிறப்பு ராணுவ விமானத்தில் 366 இந்தியர்கள் மீட்கப்பட்டு பெங்களூரு விமான நிலையம் அழைத்து வரப்பட்டன. அதில் 52 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சூடானில் துணை ராணுவப் படைகளுக்கும் சூடான் ஆயுதப் படைகளுக்கும் இடையே அதிகாரத்துக்கான போர் நடந்து வருகிறது. இதனால் சூடானில் பொதுமக்கள் ஆபத்தில் உள்ளனர். ஏற்கனவே சூடான் துறைமுகத்தை அடைந்த இந்தியர்கள் கப்பல் மற்றும் விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இதையும் படிங்க: மதிப்புமிக்க இணையதள விருதை வென்றது சத்குருவின் சேவ் சாயில் இயக்கம்!!
அந்த வகையில் சிறப்பு ராணுவ விமானம் மூலம் இந்தியர்கள் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர். 362 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில் அதில் 56 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்திற்கு வந்த இந்தியர்கள் சோதனை செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் பெறப்பட்டதோடு அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: ஆயுஷ் துறையில் பிரதமர் மோடியின் மன் கி பாத் ஏற்படுத்திய 7 தாக்கங்கள்
மேலும் சூடானில் இருந்து மீட்டு பெங்களூர் வந்த இந்தியர்கள் அனைவரையும் விமான நிலையில் கர்நாடக மாநில சுகாதாரத் துறை ஆணையர் ரன்தீப் வரவேற்றார். மேலும் 500 இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த மீட்பு பணியில் இந்திய விமான படையின் C-17 Globemaster விமானம் இடம்பெற்றுள்ளது. மேலும் இதனை முதல் மற்றும் ஒரே பெண் விமானியான ஃப்ளைட் லெப்டினன்ட் ஹர் ராஜ் கவுர் போபராய் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.