36 prisoners have aids in parappana agarahara
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள 36 கைதிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பெண்கள் உட்பட 2,300 பேர் வரை அடைக்கலாம். ஆனால் தற்போது அந்த சிறையில் 4,400 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
மிகுந்த நெரிசலுடன் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சிறைவாசிகள் இதனால் மிகவும் சிரமப்படுவதுடன் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக அரசின் சுகாதாரத்துறை மூலம் அனைத்து கைதிகளுக்கும் அண்மையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பரிசோதனை செய்யப்பட்டதில் 36 கைதிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாமல் ஏராளமானோர் காசநோய், வலிப்பு நோய், மன அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
4,400 பேர் அடைக்கப்பட்டுள்ள உள்ள சிறையில் 3 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிவதாக தெரிகிறது. நாள் ஒன்றுக்கு 200 கைதிகள் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருகின்றனர்.
அவர்கள் அத்தனை பேரையும் வெறும் 3 டாக்டர்கள் மட்டுமே பார்த்துக் கொள்வது சாத்தியமில்லை என கூறும் சிறை அதிகாரிகள் கூடுதலாக மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
