கடந்த 16 ஆண்டுகளில் சென்ற ஆண்டில்தான் அதிகளவில் அந்நாடு அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. .

இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருந்தாலும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. 2019ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில்  பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 3,289 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

 
இதில், ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு மட்டும் 1,565 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்ப பெற்றது. 

கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 9 முறை பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஆண்டில் பாகிஸ்தான் ராணுவம் அதிகளவில் ஷெல்லிங் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள், 2003ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே உருவான எல்லை ஒப்பந்தத்தை தேவையற்றதாகி விட்டது.
மக்கள் மத்தியில் அச்ச மனநோயை உருவாக்கும் நோக்கில், எல்லை கட்டுப்பாடு பகுதி மற்றும் சர்வதேச எல்லை பகுதிகளில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.