3 Indian jawans killed by kashmir terrorists

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் அட்டகாசம்….திடீர் தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 3 பேர் பலி…

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் உட்பட மூன்று இந்திய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லோவர் முன்டா பகுதியில் ராணுவ வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீர் என ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் 5 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். 

இதே போன்று காஷ்மீரின் காஸிகுண்ட் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிவண்ணன் என்ற வீரரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாய்க் திபாக் மைதியும் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் ராணுவமும் எல்லை ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.