Asianet News TamilAsianet News Tamil

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 3 எளிய வழி!

3 easy way to connect Aadhar Number with Mobile Number
3 easy way to connect Aadhar Number with Mobile Number
Author
First Published Nov 16, 2017, 12:47 PM IST


பல்வேறு சேவைகளுக்கும் ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், செல்போன் எண்ணுடனும் கட்டாயமாக ஆதார இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான கால அவகாசம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. 

இதற்காக செல்போன் பயன்படுத்தும் அனைவரும் செல்போன் ஆப்ரேட்டர்களின் கடைக்கு சென்று இதனை இணைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது மக்களுக்கு மிகவும் கடுமையாக இருக்கும் காரணத்தால், செல்போன் எண்ணுடன் ஆதர் எண்ணை இணைப்பதில் மக்கள் மெத்தனம் காட்டி வருகின்றனர். தற்போது இதனை எளிமைப்படுத்த புதிய சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைக்கும் பணியை எளிமைப்படுத்தும் வகையில், ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில், OTP கொண்டு செல்போன் எண்ணை இணைக்கும் ஒரு திட்டத்தை ஆதார் அமைப்பான UIDAI-யிடம் டெலிகாம் சேவை அளிக்கும் நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் எளிமையான முறையில் பயன்டுத்தும் வகையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது UIDAI அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

மொபைல் எண்கள் அனைத்தையும், இந்த புதிய சேவையின் மூலம் இணைத்துக் கொள்ள முடியும் என்றும், இதனால் மக்கள் செல்போன் ஆப்ரேட்டர்கள் கடைக்குச் செல்லவேண்டியதில்லை என்றும் கூறப்படுகிறது.

டெலிகாம் துறை, டெலிகாம் நிறுவனங்களின் வாயிலாக மொபைல் எண் மற்றும் ஆதார் இணைப்பை எளிமைப்படுத்த 3 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. (1) OTP எனப்படும் எஸ்.எம்.எஸ். மூலம் வரும் தற்காலிக குறியீட்டு எண் மூலம் இணைக்கலாம். (2) மொபைல் அப்ளிகேஷன் மூலம் இணைப்பது. (3) IVRS எனப்படும் போன் அழைப்பில் குரல் பதிவின் வழிகாட்டலை பின்பற்றி இணைப்பது.

Follow Us:
Download App:
  • android
  • ios