3 activists of Yogi Adityanath Hindu Yuva Vahini arrested on rape charge

உ.பி.யில் கூட்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் முதல்வர்் ஆதித்யநாத் தலைமையிலான `இந்து யுவ வாகினி' அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தது, போலீஸ் அதிகாரியை தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்கள் மூவரையும் போலீஸ் கைது செய்து உள்ளது.

உ.பி. மாநிலம் பரேலியைச் சேர்ந்த கணேஷ்நகர் பகுதியில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பியது தொடர்பாக நேற்று இரவு தீபக் மற்றும் அவினாஷ் என்ற இரு வாலிபர்களுக்கு இடையே மோதல் எற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவினாஷ் தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு தீபக் வீட்டிற்குள் நுழைந்து உள்ளார். அங்கிருந்த பெண்களிடம் முறை தவறி அவர்கள் நடந்து கொண்டனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவினாஷ், அவருடைய நண்பர்கள் இந்து யுவ வாகினி அமைப்பை சேர்ந்தவர்கள். இதனையடுத்து தீபக் அவினாஷை அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்து உள்ளார்.

இதுதொடர்பாக செய்திகள் பரவியதும் இந்து யுவ வாகினி அமைப்பின் பிராந்திய தலைவர் ஜிதேந்திர சர்மா தலைமையில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸ் நிலையம் சென்றுள்ளனர். போலீஸ் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் உமேஷ் காதாரியாவும் அங்கு சென்று உள்ளார். காவல் நிலையத்தில் போலீசாரிடம் இந்து யுவ வாகினி அமைப்பினர் மோசமாக நடந்து கொண்டு உள்ளனர். உதவி சப்-இன்ஸ்பெக்டர் அரோராவை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக அம்மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் இரு எப்.ஐ.ஆர்.களை பதிவு செய்து உள்ளார்.

எஸ்.ஐ. அரோரா அளித்த புகாரின்படி அவினாஷ், ஜிஜேந்திரா, பங்கஜ் உள்ளிட்டோருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெண் ஒருவர் தான் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி புகார் கொடுத்து உள்ளார். இது தொடர்பாக 3 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவினாஷ், ஜிஜேந்திரா, பங்காஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடைபெற்று வருகிறது.