2nd day lorry strike... affect 80 percentage business

இன்று 2வதுநாளாகதொடரும்லாரிகளின்வேலைநிறுத்தப்போராட்டத்தால், நாட்டின்பல்வேறுபகுதிகளில்சரக்குகள்தேக்கமடைந்துள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கியது.

ஜி.எஸ்.டி வரி, டீசல் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டணம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கம் சார்பில், நேற்றுமுதல் நாடு தழுவிய லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

இதனைதொடர்ந்து, 2வது நாளான இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால், டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தொழில் நகரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் லாரிகளின் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.இந்த போராட்டத்தால், சரக்குகள் தேக்கமடைந்து 80 சதவீதத்திற்கும் மேலாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில்வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டலாரிடிரைவர்கள், மன்குர்ட்சோதனைச்சாவடியில்தர்ணாபோராட்டம்நடத்தினர். இந்தமுதல்நாள்போராட்டம்முழுவெற்றியடைந்துஇருப்பதாக..எம்.டி.சி. தெரிவித்துஉள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தில் இருந்து அத்தியாவசியபொருட்களுக்குவிலக்குஅளிக்கப்பட்டிருந்தபோதும் , பொருட்களின்வினியோகம்கடுமையாகபாதிக்கப்பட்டது.