custodial death: கடந்த ஓர் ஆண்டில் 2,544 கஸ்டோடியல் மரணங்கள்: உ.பி. முதலிடம், தமிழகத்தில் அதிகரிப்பு
கடந்த ஓர் ஆண்டில் நாடுமுழுவதும் போலீஸ் மற்றும் நீதிமன்ற கஸ்டோடியலில் 2,544 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 501 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஓர் ஆண்டில் நாடுமுழுவதும் 2,544 பேர் கஸ்டோடியலில் உயிரிழந்துள்ளனர். இதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 501 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து பர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ கடந்த 2021, முதல் 2022 மார்ச் மாதம் வரை நாட்டில் 37 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 2,544 போலீஸ் கஸ்டோடியல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
PMLA Judgment: அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சரியானதுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!
இதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 501 பேர் உயிரிழந்துள்ளனர். 2020-21ம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 451 பேர் மட்டும்தா இறந்திருந்தார்கள்.
2வது இடத்தில் மேற்கு வங்கம் இருக்கிறது. மே.வங்கத்தில் 257 பேர் போலீஸ் லாக்அப்பில் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பிஹார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
2020ஏப்ரல் முதல் 2021 மார்ச் மாதம் வரை, 1940 கஸ்டோடியல் மரணங்கள் மட்டுமே நிகழ்ந்திருந்தன.
2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரைஅதிகமான போலீஸ் என்கவுன்ட்டர்கள் ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ளன.
current bill: என்னது!ரூ.3,419 கோடிக்கு கரண்ட் பில்லா: அதிர்ச்சியில் வீட்டு உரிமையாளருக்கு நெஞ்சுவலி
ஜம்மு காஷ்மீரில் 45 என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன. சத்தீஸ்கரில் 30 என்கவுன்ட்டர்களும் நடந்துள்ளன. போலீஸ் என்கவுன்ட்டர்களைப் போல் லாக்அப்பில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் இறப்பதும் அதிகரித்துள்ளது.
அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்துவது 8 ஆண்டுகளில் 27 மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் கடந்த 2020-21ம் ஆண்டில் 63 கஸ்டோடியல் மரணங்கள் மட்டுமே நிகழ்ந்திருந்தநிலையில்2021-22ம் ஆண்டில் 109 மரணங்கள் நடந்துள்ளன
இவ்வாறு மத்திய அரசுதெரிவித்துள்ளது