25 percentate of bad debt from these companies

நாட்டின் வாராக் கடன் தொகையான ரூ.9.50 லட்சம் கோடியில் 25 சதவீதத்தை 12 பெரிய நிறுவனங்கள் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் உள்ளன. அந்த நிறுவனங்களின் பெயர்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அந்த பட்டியலில் முதலில் இருப்பது ‘பூஷன் ஸ்டீல் லிமிடட்’. இந்தியாவில் ஆட்டோ-கிரேட் ஸ்டீல்தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இந்த நிறுவனம் பெற்று திரும்ப செலுத்தாத தொகையின் அளவு ரூ.44,478 கோடிகள்.

லான்சோ இன்ஃப்ராடெக் லிமிடட்

உலகிலேயே மிக வேகமாக வளரும் நிறுவனங்களில் இடம்பிடித்திருக்கும் லான்சோ இன்ப்ராடெக் நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் ரூ.44 ஆயிரத்து 364 கோடி.

எஸ்ஸார் ஸ்டீல் லிமிடட்:

ஸ்டீல் தயாரிப்பில் இந்தியாவில் முன்னிலை வகிக்கும் எஸ்ஸார் லிமிட். கடன் ரூ.37 ஆயிரத்து 284 கோடி. 

பூஷன் பவர் அன்ட் ஸ்டீல் லிமிடட்:

பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின் கூட்டு நிறுவனம்தான் இந்த பூஷன் பவர் அன்ட் ஸ்டீல் லிமிடட். இந்த நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.37 ஆயிரத்து 248 கோடி.

அலோக் இன்டஸ்ட்ரீஸ்: 
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெக்ஸ்டைல் தயாரிப்பு நிறுவனத்தின் கடன் தொகை ரூ.22 ஆயிரத்து 075 கோடிகள்.

ஆம்டெக் ஆட்டோ லிமிடட் :

இந்தியாவின் இன்டிக்ரேட்டட் காம்பொனென்ட் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் இந்நிறுவனத்தின் கடன் தொகை ரூ.14 ஆயிரத்து 74 கோடி.

மொன்னெட் இஸ்பத் அன்ட் எனர்ஜி லிமிடட்:

ஸ்டீல் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் இந்நிறுவனத்தின் கடன் தொகை ரூ.12 ஆயிரத்து 115 கோடி.

எலக்ட்ரோ ஸ்டீல்ஸ் லிமிடட்:

 கொல்கத்தாவை மையமாகக் கொண்டு இயங்கும் எலக்ட்ரோ ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் கடன் தொகை ரூ.10 ஆயிரத்து 273 கோடி.

எரா இன்ப்ரா எஞ்ஜினியரிங் லிமிடட்:

அடிப்படை கட்டமைப்பு துறையில் முன்னணியில் இருக்கும் இந்த நிறுவனத்தின் கடன் தொகை ரூ.10 ஆயிரத்து 65 கோடி.

ஜெய்பீ இன்ப்ராடெக் லிமிடட்

 ஜெய்பீ குழுமத்தைச் சேர்ந்த ஜெய்பீ இன்ப்ராடெக் லிமிடட் நிறுவனத்தின் கடன் நிலுவைத் தொகை ரூ.9 ஆயிரத்து 635 கோடி.

ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடட்

 அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் கடன் தொகை ரூ.6 ஆயிரத்து953 கோடி.

ஜோதி ஸ்ட்ரக்சுரெஸ் லிமிடட்:

பவர் டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தின் கடன் தொகை ரூ.5 ஆயிரத்து 165 கோடி.