வேறு சாதி  பையனை காதலித்து கல்யாணம் செய்துகொண்டதால்  பெற்ற மகளையே  தந்தையே  மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தல் உள்ள சைன்புர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். ராஜ்குமார் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் லக்ஷ்மியின் பெற்றோர் இந்த  காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனாலும்  காதலை கைவிட மறுத்த லக்ஷ்மியும் ராஜ்குமாரும் , வீட்டுக்கு தெரியாமல் ரிஜிஸ்டர்  கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த தனது சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய லக்ஷ்மியை அவரது தந்தை லக்ஷ்மியை விரட்டிச் சென்றார். எவ்வளவோ  முயற்சித்தும் மகளை வீட்டிற்கு அழைத்து  வர முடியாததால் ஆத்திரமடைந்த அப்பா அருகில் இருந்த வீட்டிற்குள் சென்று மண்ணெண்ணெய் கேனுடன் வெளியே வந்தார். இதனைக் கண்ட லக்ஷ்மி விபரீதமாக ஏதோ நடக்கப்போகிறது என்பதை அறிந்து உயிர்பிழைக்க  தப்பி ஓடியுள்ளார்.விடாமல் துரத்தி சென்ற தந்தை  லக்ஷ்மி மீது மண்ணெண்ணெயை ஊற்றி உயிருடன் தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் அலறி துடித்த லக்ஷ்மி தரையில் உருண்டு உயிர் பிழைக்க போராடிய லக்ஷ்மி  பத்தே நிமிடத்தில்  உடல் முழுவதும் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுந்தர் லால் மற்றும் அவரது சகோதரரை கைது செய்தனர்.  நடு ரோட்டில் இந்த சம்பவம் நடந்த போதும் யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை. மாறாக சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.