கேரளாவில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளதா முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். 

கொரோனாவில் இருந்து படிப்படியாக மீண்டு வந்த கேரளாவில், இப்போது வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கேரளாவில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலத்தில் இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்ட 24 பேரில் 12 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மேலும், 11 பேர் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்கள். எஞ்சிய ஒரு நபர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது.